நாகர்கோவில் மாவட்டத்தில் டவர் பகுதியில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்த தோழர் s. சுப்பிரமணிய பிள்ளை 15 05 2019 அன்று உடல் நலம் சரியில்லாமல் மரணமடைந்தார். திருமணமாகாத அவருக்கு சுப்பம்மாள் என்ற வயதான தாயார் மட்டும் உண்டு.
அவருடைய ESI லிருந்து இறுதிச்சடங்கிற்கான தொகை 15 000, EPF DEPOSIT தொகை , EDLI ( EPF DEPOSIT LINKED INSURANCE ) தொகை தாயாருக்கு EPF PENSION தொகை கேட்டு தொடர்ந்து நாகர்கோவில் TNTCWU மாவட்ட சங்கம் வலியுறுத்தி வந்த்தது. முதற்கட்டமாக 2019 ஆண்டிலேயே ESI லிருந்து இறுதிச்சடங்கிற்கான தொகை 15 000 கிடைத்து விட்ட்து . ஆனால் மற்ற தொகை எதுவும் கிடைக்க வில்லை.
தொடர்ச்சியாக பல மாதங்கள் மல்லி செக்யூரிட்டி சர்வீஸ், கவிக்கோ ஒப்பந்தகாரர்கள் மற்றும் அம்பத்தூர் , தாம்பரம் EPF அலுவலக்ங்களுக்கு நேரில் சென்று மனு அளித்தும் பேச்சு வார்த்தை நடத்தியும் நாகர்கோவில் மாவட்டச்சங்கம் முயற்சி செய்து வந்தது. பல கட்ட முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது.
தோழர் சுப்பிரமணியத்தின் EPF DEPOSIT தொகையான ரூபாய் 2 61 230, EDLI தொகை ரூபாய் 1 20 000 , அவருடையா தாயார் சுப்பம்மாளுக்கு 16 05 2019 முதல் மாத EPF பென்சன் ரூபாய் 2 796 அனுமதி அளித்து உத்தரவு வெளியாகி விட்டது.
பென்சன் நிலுவை தொகை ரூபாய் 1 20 000 கிடைக்கும்.
தொடர்ச்சியான முயற்சி செய்து வெற்றி கண்ட நாகர்கோவில் மாவட்ட சங்கத்திற்கும் மாவட்ட செயலர் தோழர் A. செல்வத்திற்கும் பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
தோழமையுடன் ,
M. சையத் இத்ரீஸ்,
TNTCWU மாநிலச் செயலர் 02 02 2023