ஒ்ப்பந்த தொழிலாளர்களின் சம்பள நிலுவை , குறைவான சம்பளம் உட்பட பல்வேறு பிரச்னை சம்பந்தமாக தமிழ்மாநில முதன்மை பொதுமேலாளர் அவர்களுடன் இரண்டாம் சுற்று பேச்சு வார்த்தை 11- 01 - 2023 அன்று நடைபெற்றது.
பேச்சு வார்த்தையில் தோழர்.S.செல்லப்பா, AGS, தோழர்.A.பாபு ராதாகிருஷ்னன், மாநில தலைவர், தோழர். P.ராஜூ மாநில செயலர், தோழர். K.ஸ்ரீனிவாசன், மாநில உதவி உதவிச்செயலர் மற்றும் தோழர். C.பழனிச்சாமி, TNTCWU தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே 01-12-2022 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்குண்டான சம்பள நிலுவை, பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்ட குறைவான சம்பளம், நீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது, கராறாக சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்குதல், EPF ESI சட்டபூர்வ விதிகள் அமுலாக்கம் ஆகிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டிருந்தன. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை மாநில சங்கங்களின் சார்பில் தயாரிக்கப்படிருந்த பட்டியலை கொடுத்து விவாதிக்கப்பட்டது. அந்தப் பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ் மாநில முதன்மை பொது மேலாளர் உறுதி அளித்திருந்தார்.
11-01-2023 நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் மறுபடியும் அதே பிரச்னைகள் எடுத்து கூறப்பட்டன. குறிப்பாக கோவை துப்புறவு பணியாளர்கள் சம்பள பாக்கி, நீலகிரி சம்பள குறைவு அனுமதிக்கப்பட்ட பின்பும் வழங்கப்படாமை, மதுரை நிலுவையில் உள்ள பில் பிரச்னை, ஈரோடு மற்றும் சென்னை மாநில அலுவகத்தில் ஒப்பந்தகாரர் பில் வாங்கி விட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்காமை போன்ற பிரச்னைகளில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட்து.
ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான அனைத்து பிரசனைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்குண்டான சம்பள நிலுவை, வழங்கப்பட்ட குறைவான சம்பளம், EPF , ESI சட்டபூர்வ விதிகள் அமுலாக்கம் மற்றுமுள்ள முக்கியமான அனைத்துப் பிரச்னைகளையும் தொகுத்து அனுப்புமாறு மாவட்டங்களுக்கு மாநில நிர்வாகத்திலிருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சம்பளம் வழங்குவத்ற்கான திட்டத்தையும் தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாவட்டசங்கள் அப்பகுதி மாவட்ட் நிர்வாகங்களுடன் பேச்சு வார்த்தை நட்த்தி பிரச்னைகளை பட்டியலிட துணை புரிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அனைத்து விவரங்களும் மாவட்டத்திலிருந்து வந்தவுடன் அனைத்து பிரசனைகளையும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தையொட்டி பேச்சு வார்த்தை முடிவுற்றது.
நமது பேச்சு வார்த்தை அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு பிர்சனைகள் சம்பந்தமாக மாநில நிர்வாகம் மாவட்டங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் நகல் நமது சங்கத்திற்கு அளிக்க்ப்பட்டது.
தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள கடித்ததின் முக்கிய உள்ளடக்கம்
1. மாவட்டங்களில் ஒப்பந்தகாரர் மூலம் பணி புரிகின்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் சம்பள நிலுவை (NON PAYMENT ) , வழங்கப்பட்டுள்ள சம்பளத்தில் குறைவு (SHORT PAYMENT ) , மற்றும் சட்டப்பூர்வ சலுகைகளான EPF , ESI ஆகியவை வழங்கப்படாமை போன்ற பிரச்னைகள் மீது BSNLEU உட்பட பிற சங்கங்களிடமிருந்தும் புகார்கள் வந்துள்ளன.
2. சென்னை உயர் நீதி மன்றத்தின் 28 04 2021 தீர்ப்பின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கும்படி DEPUTY CHIEF LAOUR COMMISSIONER அவர்கள் எழுதிய கடிதமும் வந்துள்ளது.
3. இது சம்பந்தமாக பழைய ஒப்பந்த முறையில் ( MAN POWER CONTRACT ) 01 01 2019 முதல் ஒப்பந்தகாரருக்கு வழங்க வேண்டிய தொகை, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை விவரங்களை மாவட்டங்கள் அளிக்க வேண்டும்.
4. மேலும் EPF ESI நிலுவை விவரங்களையும் அளிக்க வேண்டும்
5. தற்போதுள்ள அவுட்சோர்சிங் சம்பள பாக்கி விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
6. முதன்மை பணியாளர் ( Principal Employer ) என்ற அடிப்படையில் BSNL நிர்வாகத்திற்கு உரிய நேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்க்கு சம்பளம் அளிக்க வேண்டிய பொறுப்பும் சட்ட பூர்வ சலுகைகளயும் அமுல் படுத்த வேண்டிய கடைமைகளும் உள்ளது.
7. எல்லா மாவட்ட நிர்வாகங்களும் குறிப்பிட காலத்தில் சம்பளமும் சட்ட பூர்வ சலுகைகளை அமுல்படுத்துதலை கண்காணிக்க வேண்டும்
8. தொழிற்சங்கங்களும் மத்திய DEPUTY CHIEF LABOUR COMMISSIONER கேட்டுக் கொண்டபடி ஒப்பந்தகார்ருக்கும் ஒப்பந்த தொழிலாளர்க்கும் உரிய நேரத்தில் பட்டுவாடா செய்வதற்கான திட்டம் வகுக்க வேண்டும்.
9. BSNL நிறுவனத்திற்குரிய கடைமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான திட்டங்களை மாவட்ட நிர்வாகங்கள் உடனே தெரிவிக்க வேண்டும்.
கடிதத்தில் மாவட்டங்கள் அளிக்க வேண்டிய விவரங்களை படிவமாக வெளியிட்டுள்ளது. படிவம் தனியாக தரப்பட்டுள்ளது. அவை அனைத்துப் பிரச்னைகளையும் உள்ளடக்கியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்னைகள் வேறுபட்டிருக்கின்றன. எனவே மாவட்ட சங்கங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மாநில நிர்வாகம் கேட்டுள்ள விவரங்களை அனுப்புவதற்கு துணை புரிந்திட வேண்டும் . தங்கள் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர் பிரச்னைகள் தீர்வு கண்டிட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
P.ராஜு
மாநிலச் செயலர்
BSNLEU. C. பழனிச்சாமி மாநிலத்தலைவர் TNTCWU
13-01-2023