tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION): 17/01/2023 செயற்குழு கூட்ட முடிவுகள்
T N T C W U

17/01/2023 செயற்குழு கூட்ட முடிவுகள்

 *தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்*

பதிவு எண் VGR 278 

*தமிழ் மாநிலம்*


அன்பார்ந்த தோழர்களே


TNTCWU தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 17/01/2023 மாலை 06:00 மணியளவில் ஆன்லைன் ZOOM காணொளி வாயிலாக மாநில தலைவர் தோழர்.C.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவில் BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர்.S.செல்லப்பா அவர்கள் கலந்து கொண்டார். 


செயற்குழுவில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் என மொத்தம் 19 தோழர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட விசயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன


1. புதிய மாநிலச் செயலர் தேர்வு

2. ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு பிரசனைகளும் தலைமை பொது மேலாளருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளும்

3. பிற விசயங்கள் 


புதிய செயலர் தேர்வு

தோழர்.C. வினோத் குமார் அவர்கள் நீலகிரி CITU மாவட்ட செயலராக பொறுப்பேற்றுள்ள காரணத்தால் தோழர் M. சையத் இத்ரீஸ் TNTCWU சங்கத்தின் புதிய மாநில செயலராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.10 வருட காலம் சிறப்பாக செயல்பட்ட தோழர் வினோத்குமார் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 


 பேச்சு வார்த்தை

01/12/2022 மற்றும் 11/01/2023 அன்று தலைமை பொது மேலாளர் திரு C. வினோத் அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் பற்றியும் விரிவாக விளக்கப்பட்ட்து. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சம்பளம் வழங்கப்படாத பிரச்னை, குறைவான சம்பளம் வழங்கப்பட்ட பிரச்னை, பில்களை பெற்றுக் கொண்டு ஒப்பந்ததாரர் சம்பளம் கொடுக்காத பிரச்னை, அதிக தொகைக்கு டெண்டர் எடுத்தும் குறைவான சம்பளம் கொடுக்கும் பிரச்னை, EPF, ESI பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகள் மறுபடியும் விவாதிக்கப்பட்டது. பிரச்னைகளின் மீது தோழர்.S.செல்லப்பா, AGS அவர்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறி வழிகாட்டினார். 

அனைத்து பிரச்னைகளையும் 31/01/2023 க்குள் மகஜராக தயார் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.


 BSNL ஊழியர் சங்கத்தோடு ஆலோசித்த பின்னர் பிப்ரவரி முதல் வாரத்தில் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகங்களுக்கு மகஜர் அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.



பிற விசயங்கள் 

 மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து ஏப்ரல் 5, 2023 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் தர்ணா போராட்டத்தில் TNTCWU சங்கமும் கலந்து கொள்ளும். ஒப்பந்த ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.


 அனைத்து கிளைச் சங்கங்களும் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் அனைத்து உறுப்பினர்களிடமும் 2023 ஆண்டு வரையிலான சந்தா வசூல் செய்திட வேண்டும்.


அனைத்து மாவட்டங்களிலும் கிளை மாநாடு மற்றும் மாவட்ட மாநாடுகள் நடத்தி சங்கத்தினை பலப்படுத்த வேண்டும்.


மேலும் திருச்சி ஒப்பந்த ஊழியர் மறைந்த தோழர் குணசீலன் அவர்களின் குடும்பத்தாருக்கு மாத பென்சன் 18,618/- பெற்றிட போராடிய மாநில சங்கத்திற்கும் குறிப்பாக மாநில தலைவர் தோழர்.C.பழனிச்சாமி அவர்களுக்கும்தோழர் S. செல்லப்பா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். 


செயற்குழு முடிவுகளை முழுமையாக அமுல்படுத்துவோம்.


தோழமையுடன்


C.பழனிச்சாமி

மாநில தலைவர்


M.சையத் இத்ரீஸ்

மாநிலச் செயலர்