tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION): அமைப்பு தினத்தில் (07.02.2019) உறுதிமொழி ஏற்போம்..

அமைப்பு தினத்தில் (07.02.2019) உறுதிமொழி ஏற்போம்..

நாம் பணி புரியும் BSNL நிறுவனம் முக்கியமான பொதுத்துறை நிறுவனமாகும்..

பொதுத்துறை நிறுவனங்களால் பாரத நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது..

பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது..

 இந்தச் சூழ்நிலைமையில் அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு பொதுத்துறை நிறுவனங்களை பெரும் முதலாளிகளிடம் விற்பது என்ற அபாய  முடிவினை தற்போதைய ஆட்சியாளர்கள் எடுத்துள்ளனர்..

பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, நிறுவனத்தையே ஒட்டு மொத்தமாக விற்பனை செய்வது, நிறுவனத்தை மூடுவது போன்ற நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளன..

இது நாட்டு மக்களுக்கு பாதகமானது..

கேந்திரமான நிருவனங்களை விற்பது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது..

இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு கேடு விளைவிக்க கூடியது..

எனவே பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தேசபக்த குடிமகனுடைய கடமையாகும்..

அந்த தேசபக்த கடமையை தொழிலாளர் வர்க்கத்தை சார்ந்த நாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளோம்..

ஒப்பந்த தொழிலாளர்களாகிய நாம், நம்முடைய எதிர்காலத்தையும், நாட்டு மக்கள் நலனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அனைத்து பொதுத்துறைகளையும் பாதுகாக்க வேண்டும்..

இன்றைய தினம்  நாம் வாங்கும் குறைந்த பட்ச சம்பளம், பஞ்சப்படி, போனஸ், EPF ESI , பணிப்பாதுகாப்பு, பென்சன் ஆகியவற்றிற்கு மூல காரணமான நமது சங்கமாகும்,

நமது அமைப்பு 1999 ஆம் ஆண்டு இதே தினத்தில் திண்டுக்கல் நகரில் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாலர் சங்கத்தை உருவாக்கினோம்..

நமது சங்க அமைப்பு தினத்தில் நாம் அனைத்துப் பகுதி தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து போராடி, BSNL நிறுவனம் உட்பட அனைத்து பொதுத்துறைகளையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்போம்..

வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று சூளுரைப்போம்..