tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னை சம்பந்தமாக...

20.06.2018 அன்று மாநில நிர்வாகத்துடன் சந்திப்பு

தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20.05.2009 முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பந்தமாக மாநில அலுவலக பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மேலாளர் உறுதி கூறியுள்ளார்.

அதே போல் பல மாவட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமபளம் வழங்கப்படாமல் இருக்கின்றது. மாவட்டங்களுக்கு தேவையான நிதி மாநில அலுவலகத்திலிருந்து ஒதுக்கப்படவில்லை என்று மாநில அலுவலக பொது மேலாளர் ( நிதி ) அவர்களிடம் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. மாவட்டங்களிலிருந்து 01.06.2018 வரை வந்திருந்த அனைத்துப்பில்களும் அனுமதிக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது ரூபாய் 3 கோடி 40 லட்சம் நிதி கேட்டு BSNL தலைமையகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். நிதி வந்தவுடன் மாவட்டத்திலிருந்து வந்த பில்கள் அனுமதிக்கப்ப்ட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தலைமையகத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் பில்களை தேங்கவிடாமல் அனைத்தையும் மாநில அலுவலக்த்திற்கு அனுப்பிட மாவட்டச் சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கின்றோம்.

பேச்சுவார்த்தைகளில் மாநிலத்தலைவர் தோழர் S.செல்லப்பா, மாநிலச் செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் மாநில உதவிச் செயலர் தோழர் M.முருகையா மாநிலப் பொருளர் தோழர் K.சீனிவாசன் BSNL CCWF உதவிப் பொதுச் செயலர் தோழர் C.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்..