tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
நாகர்கோவில் மாவட்டச்செயலர் தோழர் செல்வம் அவர்களின் கவனத்திற்கு..
                                                                                                                                                 இந்தியாவிலேயே  எங்கும் இல்லாத வகையில் நாகர்கோவில் SSA  யில்     01.11.2005 முதல் EPF அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலச் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் 01.10.2000 முதலே ஒப்பந்த தொழிலாலர்களுக்கு EPF  அமுல்படுத்த வேண்டும் என்று நாகர்கோவில் EPF  ஆணையர் 01.03.2018 அன்று  உத்த்ரவிட்டுள்ளதை எனக்கு அனுப்பியிருந்தீர்கள்.                                                                                                                         87 ஒப்பந்த      ஊழியர்களுக்கு  நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் 18,83,033  ரூபாயை ஏழு தினங்களுக்குள்       செலுத்த வேண்டும் என்று   அந்த உத்தரவில் தெளிவாக குறிபிட்டுள்ளார்.                                                                                                      இந்த உத்தரவை பெறுவதற்கு முயற்சிகள் செயத நாகர்கோவில் மாவட்ட சங்கத்தை, அதிலும் குறிப்பாக தங்களை  மனதார  பாரட்டுகின்றேன்   வாழ்த்துகின்றேன்.  தற்போது என்ன நிலைமையில் உள்ளது என்பதை தெரிவிக்கவும். நிர்வாகம் பணம் செலுத்தி விட்டதா ? அல்லது நீதி மன்றம் சென்றுள்ளதா ? உத்தரவு அமுல் படுத்தும் வரை உங்கள் மாவட்டச் சங்கம் கவனம் செலுத்த வேண்டும். மாநிலச் சங்கத்தின் உதவி தேவை என்றாலும் தெரிவிக்கவும்.                                                                                                                 வாழ்த்துக்களுடன்,                                                                                                                              C. வினோத் குமார்..

மாநிலச் செயலர்  TNTCWU