tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை குறைப்பது சம்மந்தமாக 

15.02.2018 அன்று டில்லி கார்ப்பரேட் அலுவலகத்தில், GM (BFCI) அவர்களை  BSNLEU பொது செயலர் தோழர் P.அபிமன்யு சந்தித்து, ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை குறைப்பது சம்மந்தமாக விவாதித்தார். செலவினங்கள் குறைப்பதிற்க்காக ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையை குறைப்பதாக நிர்வாகம் தெரிவித்த கருத்திற்கு, எதிர்ப்பினை அழுத்தமாக BSNLEU பொது செயலர் தோழர் P.அபிமன்யு பதிவு செய்தார். மாற்று ஆலோசனையாக, மின்சாரம், வாகன வாடகை போன்ற விஷயங்களில் செலவினங்களை குறைக்க BSNLEU பொது செயலர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை சம்மந்தமாக, மேல்மட்ட நிர்வாகத்துடன் விவாதிப்பது என BSNLEU மத்திய சங்கம் முடிவெடுத்துள்ளது..

BSNL ஊழியர் மத்திய சங்கத்திற்கும் பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யுவிற்கும் தமிழ் மாநில TNTCWU வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது..