


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க நான்காவது மாநில மாநாடு 16 & 17 /10/2010(சனி & ஞாயிறு )தேதிகளில் புதுச்சேரி நவீனா கார்டனில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது 16/10/2010 நிகழ்ச்சி சுமார் 10 மணியளவில் தொழர் S.சங்கரன் (மாவட்ட செயலர் BSNLEU)தேசிய கொடிஏற்ற தோழர் C.குமார் (மாவட்ட செயலர் TNTCWU )சங்ககொடி ஏற்ற விழாஇனிதே ஆரம்பமானது மாநாட்டிற்கு வந்த அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகளையும்,சார்பாளர்களையும் தோழர் C.குமார் வரவேற்று பேசினார். தியாகிகளுக்கு அஞ்சலி தோழர்K.மாரிமுத்து (மாநில தலைவர் BSNLEU)தோழர் K.சுரேஷ் (மாநில தலைவர்
T N T C W U ) துவக்க உரையாற்றினார்.
தோழர் S.செல்லப்பா (மாநில செயலர் BSNLEU)சிறப்புரையாற்றினார்
அவர் பேசியதாவது
2008 _ல் சென்னைக்கு அழைத்தோம் வந்தீர்கள் ,அழைக்கும் போதெல்லாம் வந்து குவிவீர்கள் அதற்கு முதலில் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்,ஆகஸ்ட் 19,20 தேதிகளில் நாடுமுளுவதும் ஒரேமாதிரியான சம்பளத்திர்கான அந்த வேலைநிருத்தத்தின் விளைவாக இன்று இந்தசம்பள மாற்றத்தினை பெற்றுள்ளோம்!இதே பாண்டிச்சேரியில் கூட 2450 ஆக இருந்த சம்பளம் இன்று 5300 ஆக மாரியுள்ளது இது போதுமா? என்றால் போதாது,அரியர்சை பொருத்தவரயில் 2008 லிருந்து பெர நிச்சயம் மிகப்பெரிய போராட்டத்தை நாம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.இன்னும் இருபது ஆண்டுகள் B S N L ஐ தூக்கிபிடிகும் துடிப்பும் துணிவும் வருங்கால தூண்கனான உங்களிடம்தான் உள்ளது.நிரந்தரம் இது நடக்குமா ? இது அனைவரின் கேள்வி ,நிரந்தரத்திற்காக ஒரு லட்சம் ஊழியர்களை திரட்டி வேலை நிருத்தம் செய்தால் நிச்சயம் நிரந்தரம் என்பது சாத்தியமே!!அனைத்து தோழர்களும் சே குவெரா வின் "வேண்டும் விடுதலை" புத்தகம் கண்டிப்பாக வாங்கி படியுங்கள் இவ்வாறு தோழர் செல்லப்பா பேசினார்
மாநாட்டில் 224 சார்பாளர்களும் , 10பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்
அமைப்பு நிலை விவாதத்தில் 3 பெண்கள் உட்பட 20 ஒப்பந்த தொழிலாளர்கள்
கலந்துகொண்டனர் பெரும்பான்மையான தோழர்கள் முறையான I D கார்டு நிர்வாகவே தரவேண்டுமெனவும் ESI கார்டு தரப்படவேண்டும் எனவும் பேசினார்கள்.பின்னர்
தோழர் முருகையா அவர்கள் பேசியதாவது
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கோர்ட் கேஸ் போடப்பட்டிருக்கிறது,மார்ச் 2011 க்குள் கோர்ட்கேஸ் இறுதி தீர்ப்புகள் வந்துவிடும் எனவும் உள் உணர்வோடு பேசிய சார்பாளர் தோழர்களை மனதார பாராட்டினார்
16/10/2010 அன்று இரவு
பாண்டிச்சேரி சப்தர் ஹஸ்மி கலைகுழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது
ஆட்டம், பாட்டம் ,கொண்டாத்தில் அரங்கமே அதிர்ந்தது
17/10/2010 இரண்டாம் நாள் மாநாட்டில் தோழர் முருகையா வரவேற்க
முதலாவதாக தொழர் தபாஸ் குமர் கோஸ்(அகில இந்திய பொதுச்செயலர்,
B C C W W F ,மேற்கு வங்கம்)அவர்கள் ஆங்கிலத்தில் பேச தொழர்
செல்லப்பா மிக எழிமையாக பொழிபெயர்த்து தனது இனிய குரலில் பேசியதாவது
மத்திய அரசின் தவரான கொள்கைகளால் தான் ஒப்பந்த ஊழியர் முரை
இந்தியாவில் .உள்ளது நம்முடயநிர்வாகம் நமது குரைகளை காது கொடுத்து
கேட்க முன்வருவதில்லை எனவேதான் அகில இந்திய அளவில் சங்கம் அமைக்க
வேண்டிய சூழ்நிலைமை ஏற்பட்டது,இந்த அகில இந்திய சங்கம் உருவாவதர்கு
B S N L E U தான் காரணம்,நமக்காக B S N L E U பல போராட்டங்களை நடத்தியுள்ளது
போற்றுதலுக்கு உரியது,தோழியர் பிருந்தா காரட் MP நமக்காக பாராளுமன்றத்தில்
குரல்கொடுத்தார்,அதன் விளைவாக சமவேலைக்கு சம ஊதியம் அளிக்கவேண்டும்
என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது,நமது பிரச்சினைக்காக பேச்சுவார்த்தை
நடத்தமறுத்த நிர்வாகம் இப்போது பணிந்தது,நாக்பூரில் B S N L E U_வின் ஒரு
முக்கியமான கூட்டத்தில் என்னையும் அழைத்து அமரவத்திருந்தனர் என் அருகில்
அமர்ந்திருந்த அனைவருமே பெரிய பெரிய அதிகாரிகள் ,அவர்கள் மத்தியில் நான்
அமர்ந்து நமது கோரிக்கைகளை வெளிப்படுத்த ,தெரிவிக்க இந்த B S N L E U
ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு வழங்கியது இந்திய அரசாங்கம் அனைத்து
தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு அழிக்கவேண்டும் என சட்டத்தில் உள்ளது ,
இன்றைய பொதுசெயலர் அபிமன்யு அவர்களுக்கு நனறி ,பணிநிரந்திரத்தை
பொருத்தவரயில் டெல்லியை நோக்கி நாடாளுமன்றம் நோக்கி மாபெரும்
பேரணியை நடத்தினால் எதுவும் சாத்தியமே!!!
இவ்வாறு அவர் பேசினார்.(மொழி மாற்றி கொடுத்த தோழர் செல்லப்பா அவர்களுக்கு
நன்றி !!!)
அதனை அடுத்து தோழர் P.அபிமன்யு (பொதுசெயலர் BSNLEU டெல்லி )
பேசியதாவது
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன் அனைவருமே
உற்சாகமாக இருக்கின்றனர் ,நாடு முழுவதும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது இது
ஒரு தனி மனிதனின் வெற்றி யல்ல இது B S N L E U _க்கு கிடைத்த மகத்தான வெற்றி
ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்காக மனு அளித்தபோது ஒப்பந்த ஊழியரின்
ஊதிய உயர்வு பற்றியும் மனுவில் தெரிவித்திந்தோம் ஊதிய மாற்றம் வரும் சூழ்நிலையில்
எனக்கு கூட கவலை இருந்தது ஏனென்றால் நிரந்தர ஊழியர்க்கு மட்டும் ஊதிய உயர்வென்றால்
இது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்திவிடுமே என் நினைத்து
கவலையடந்தபோது இவர்களூக்கும் ஊதிய மாற்றம் என்பது மனதுக்கு சற்று
ஆறுதலாக இருந்தது ,நாம் இந்த அமைப்பை வலுப்படுத்தவேண்டும் அப்போது தான்
வெற்றி பெரமுடியும் .திண்டுக்கல்லில் சங்கம் ஆரம்பித்து 11 வருடம் ஆகிவிட்டது
வேலையை விட்டு ஒரு தோழரை கூட நிறுத்தமுடியாது என்ற நிலையை
உருவாக்கியுள்ளோம் உதாரணத்திற்கு புதுசேரியில் கூட வேலை நிறுத்ததில் ஈடு பட்ட
4, 5 ஒப்பந்த ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கபட்டனர்,இதர்க்கு எதிராக
பல இயக்கங்கள் ,பலபோராட்டங்கள் நடத்தினர் பொதுமேலாளரை முற்றுகை போராட்டம்
நடத்தினர் வெற்றியும் பெற்றனர் ,அடக்கவந்த காவலர்கள் நிலைமையை தெரிந்துகொண்டு
ஆதரவு தந்தனர். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன ,இந்தியாவும் பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது பெருமைதான்,ஆனால் இன்த வெற்றியின் பின்னணியில் சுமார் 5 லட்சம் ஒப்பந்த ஊழியர் கள் பணியாற்றினர் என்பது நிதர்சனமான உண்மை இவர்களுக்கு எந்த முகவரியும் இல்லை ,நியாயமான கூலி கூட கிடைக்கவில்லை
BSNL பொருத்தவரையில் போனஸ் கிடயாது BSNL எதிர்காலத்தில் கேள்வி குறி
யாக உள்ளது டிசம்பர் 1 2 3 தேதிகளில் இந்த நிறுவனத்திற்காக வேலை நிறுத்தம் செய்வதென
முடிவு செய்யப்பட்டுள்ளது BSNL இருந்தால் தான் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரம்
இருக்கமுடியும். தோழர்கள் அனைவரும் தீக்கதிர் கண்டிப்பாக படிக்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்
பின்னர் தோழர் முருகையா தொகுப்புரை யாற்றினார் அவர் பேசியதாவது
இங்கு பேசப்பட்ட பெரும்பாலான விசயம் அடையாளாஅட்டை பற்றிதான்
அடையாள அட்டை பொருத்தவரை சங்க உறுப்பினர்களுக்கு அதாவது முரையாக
சந்தா செலுத்துகிறவர்களுக்கு மட்டும் 3 மாததிற்குள் சங்க அடையாள அட்டை
கட்டிப்பாக வழங்கப்படும் இது அனைத்து மாவட்டங் களையும் உள்ளடக்கி ஒருமாவட்டதில்
ஆரம்பித்து முடிகிறபோது வரிசைஎண் தவராமல் இருக்கும்,பணிசெய்கிற இடத்தில் அந்தந்த
நிறுவனத்தின் மூலமும் அடையாள அட்டை வழங்கப்படும்,இது நிரந்தரமான அடையாள அட்டை
அல்ல நிச்சயம் உங்களையெல்லம் நிரந்தரப்படுத்தி கண்டிப்பாக நிர்வாகத்தின் அடையாள அட்டை
உங்கள் கைகளில் தவழும் காலம் வெகு தொலைவில் இல்லை...
ESI PFபொருத்தவரையில் 10 ரூபாய் பணம் கட்டணமாக செலுத்தி தகவல் அறியும் உரிமை சட்டதின் மூலம் பணம் செலுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதை தெரிந்துகொள்ளலாம்
EPF என்பது 18 மாவட்டங்களிலும் இரண்டு மாநிலசங்களும் சேர்ந்து வாங்கிதரும்
ஒரு SDE கண்ரோலில் இரண்டு ஒப்பந்த ஊழியர் என்ற நிலை
எல்லாஇடங்களிலும் விரைவுபடுத்துவோம் இதன் மூலம் பரசண்டேஜ் முரையினை ஒழிப்போம்
ப்ராஜக்ட் சன்ஜாய் திட்டத்தின் அனைத்து ஒப்பந்த ஊழியருக்கும் வேலை கிடப்பதர்கு வாய்பு
உள்ளது அரியர்சை பொருத்தவரை சில மாவட்டங்களில் சில மாதங்களுக்கு மட்டுமே வாங்கியுள்ளனர்
இன்னும் மிக பெரும் தொகையினை அரியர்சாக பெரும் வாய்ப்பு உள்ளது
பணி நிரந்தரத்தை பொருத்தவரையில் தமிழகத்தில் மட்டும் தான் வழக்கு தொடரபட்டுள்ளது
நிச்சயம் இரண்டு சங்கங்களின் உதவியோடு வெற்றி பெருவோம்...
நிகழ்ச்சி இருதியில் பல்வேறு வேலைகளுக்கிடையே வந்து கலந்துகொண்டு சிற்ப்புரையாற்றிய
சி ஐ டி யூ மாநில செயலர் தோழர் கருமலையான் அவர்கள்
பல்வேறு விசயங்களை விரிவாக பேசியதோடு புதிய நிர்வாகிகளை வாழ்த்திப்பேசினார்
தீர்மானங்கள்
-------------
1.குரூப் இன்சுனன்ஸ் திட்டம் அமுல்படுத்துவது
2.T H , N H க்கு அரசு விடுமுரை அளிக்கப்படவேண்டும்
3.கேபிள் பகுதிக்கு EPF ESI வசதி பெருவது
4.அனைத்து பகுதியிலும் போனஸ் பெருவது
5.பெண்களுக்கு ESI திட்டத்தில் உள்ள அடிப்படையில்
பேருகால விடுப்பு அமுல்படுத்துவது
6.PAY SLIP மூலம் சம்பளம் பெருவது
7.சமவேலைக்கு சமஉதியம் பெருவது
8.விலைவாசிக்கெதினார போராட்டம் நடத்துவது
9.NLC ஊழியர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது
10.நிர்வாகத்தின் மூலமே அடையாளா அட்டைபெருவது
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
-----------------------------------------------------------
தலைவர் : தோழர் K.சுரேஷ் ஒப்பந்த ஊழியர் , நாகர்கோயில் 94434 49551
உதவித்தலைவர்கள் :
தோழர் P. மாணிக்கமூர்த்தி STS(O), சென்னை 94430 47756
தோழர் S. செல்லப்பா, சென்னை 9444031715
தோழர் தமிழ்வேந்தன் புதுவை
பொதுச்செயலர் :
தோழர் M.முருகையா TM, இராசபாளையம் 94427 17220
உதவிபொதுச்செயலாளர்கள் :
தோழர் M.நாராயணசாமிSS(O) தருமபுரி 94434 63666
தோழர் K.சேகர் TM வேலூர்
தோழர் K.சோனைமுத்து,ஒப்பந்த ஊழியர் மதுரை
94869 79696
பொருளாளர் :தோழர் K.விஸ்வநாதன் TM, திருப்பூர்
9443471005
மாநிலசெயர்குழு உறுப்பினர்கள் :
தோழர் K.ராமசாமி ஈரோடு
தோழியர் ராஜமணி ஒப்பந்த உழியர், கோவை 94862 18005
தோழர் நித்யானந்தன் ஒப்பந்த உழியர் குடந்தை 94429 87080
தோழர் மகாலிங்கம் தஞ்சை
தோழியர் வளர்மதி ஈரோடு
தோழர் S.ஆரோக்கியதாஸ்கென்னடி குன்னூர் 94434 33406
தோழர் ராஜீவ் திருநெல்வேலி
தோழர் குணசேகரன் தூத்துக்குடி
தோழர் முத்து கணங்கு ஒப்பந்த உழியர் காரைக்குடி
தோழர் I.S.சுந்தரக்கண்ணன் ஒப்பந்த உழியர் திருப்பூர் 944 2352000
தோழியர் இசையரசி சேலம்
தேர்தலை தோழர் K.மாரிமுத்து அவர்கள் நடத்திவைத்தார்கள்