” மீண்டும்
வேண்டும் விடுதலை “
பாரதி பாடித் துடித்த
விடுதலை !
காந்தி மகான் காணத் துடித்த
விடுதலை !
பகலுமன்றி இரவுமன்றி
நள்ளிரவில்
விடியலாய் விடிந்தது
,விருப்பமாய் விளைந்தது.
விடுதலை தேசமாயினும்
மீண்டும் ,
”வேண்டும் விடுதலை” என
வேண்டித்தான்
நிற்கின்றோம் விருப்பித்தான்
கேட்கின்றோம்.
வறுமையும், ஊழலும் நிரந்தரம்
ஆகிவிட்டது
விலைவாசி உயரத்தில் ,
விசுவாசம் பள்ளத்தில்
உள்ளத்தின் கனவுகளில்
லச்சமும் கோடியுமே !
கல்லறை நிலங்கள் கூட
காணாமல் போகும் நிலை
சில்லறை போல் வாணிபமும்
சிதறியே போன கதை
அண்டைநாட்டு தொழிலாளிகள்
நம்நாட்டின் முதலாளிகள்
தண்ணீர் தண்ணீர், எனக்
கண்ணீர் வடிக்கப் பல,
தேசங்கள் இருக்க, பாட்டில் போட்டு விற்றுவரும்
பார்களையும் தாண்டி இன்று
அரசே விற்கிறது.
பொதுத்துறை எல்லாம் தனித்துறை
ஆக்கிவிட்டால்
துரை களுக்கு இங்கே என்ன வேலை ?
சாதிக்க பிறந்தவனை சாதிக்குள்
மாட்டிவிட்டு
மதமும், மொழி யுமாய்
பிரித் தாளும்
சூழ்ச்சிக்கு , வீழ்ச்சியே
! காட்சியாய் வேண்டும்
தாத்தா கொடுத்ததை பேரன்
கெடுப்பதும்,
மாமியார் தந்ததை மருமகள்
எடுப்பதும் என,
மாறி மாறி தொடர்ந்து
வரும் தொடர் கதைக்கு,
மாற்றுக்கதை சொல்வோம்
நாம்,
என் சாதி, என் மதம் என
சாக்கு போக்கு
சொல்லாமல் வாக்கு மாற்றி
அளித்துவிட்டால்
உழைப்பவனுக்கு அரியணை
கிடக்கும்,இதுவரை
சொன்ன சொல்லுக்கும் விடுதலை
கிடைக்கும்,
நம்மோடு சிறைபட்டு நிற்கும் ஒப்பந்தத்திக்கும் ,
விடுதலை கிடத்து விடும், BSNL வீதியில் நாமெல்லம்
நிரந்தரமாய் வலம் வரலாம் .
ஐ.எஸ். சுந்தரக்கண்ணன்
ஒப்பந்த தொழிலாளர்,திருப்பூர்
.
பொன்மானைத்தேடி..<<<click here>>>..
பொன் மானைத் தேடி..............
பொன்மானாய் தேடி வந்தோம் அது
பொய்மானாய் போய் விடுமோ !
பொற்குவியாய் நாடி வந்தோம் அது
வெற்குவியாய் ஆகிடுமோ !
பொற்கிளி தான் என எண்ணி , யதை
பொத்தி பொத்தி வளர்த்து வந்தோம்
வளர்ந்து வந்தது பைங்கிளியாய்
”கைக்” குரங்கிடம் சிக்கிடுமோ !
BSNL – லில் வேலை இது
பத்திர மானதுதான் என எண்ணி
பணிந்து பணிந்து தான்பணி செய்தோம்
பத்திர மாய் நினைத்த தின்று வெற்றுப்
பத்திர மாய் போய் விடுமோ !
BSNL – இது பொன்முட்டை யிடும் வாத்து,
என பார்த்துத்தான் பணியில் சேர்ந்தோம் அதை
பொருக்காத நிர்வாகமும் பொல்லாத அரசாங்கமும்
பொசுக்கித்தான் போட்டிடுமோ ! ”பங்கு” போட்டு
தின்று தான் தீர்த்திடுமோ
பத்தோடு பத்து சேர்ந்த ஆண்டுக்குமேல்
பற்றோடு பகலிரவாய் பாடுபட்டு ,,கம்பம் நட்டு ,
கம்பி இழுத்து ,கடும் குழிகள் பல தோண்டி விட்டு ,
கேபிள்களின் பிணிதீர்த்து ,கணினியும் கற்றுத்தோய்ந்து
வலைத்தளங்களும் வடிவமைக்கும் பேராற்றல் பெற்று
காவல்பணியிலும் களமிரங்கி கால்பதித்து நடந்துவரும்
எங்கள் கனவென்று மாறுமோ ! நினைவு என்று நீங்குமோ
நிரந்தரம் தான் எங்கள் கனா ! அது பகலிலே
கண்ட கனா வாய் பலிக்காமல் போய்விடுமோ
இப்படியெல்லாம் நித்தம் நித்தம் புலம்புகின்ராய்,
வறுமையோடு நித்தம் யுத்தம் புரிகின்றாய்
முடியப்போகுது உன் புலம்பல்,பலிக்கப் போகுது
உன் கனவு,படியப்போகுது உன் நினைவு
துப்பாக்கியில் இருந்தோம் இரு குழலாய்
இனி ஆவோம் ஒரே குழலாய் !
ஓங்கி ஒலிப்போம் உலகமெல்லாம்
தோல்வி இனி உனக்கில்லை
துடிப்பாய் இருந்திடு தோழனே !
தேதி இனி ஏழுக்கு மேல் சம்பள பாக்கி இராது
பாக்கியாய் இருக்கும் அரியர்சும் பட்டென
வந்து சேருமே ,EPF பும் ESI யும்
இனிமேல் முறையாய் ஆயிடுமே
பத்தாயிரம் சம்பளம் இது முத்தாகக் கிடைத்திடும்
இதுதான் முடிவா என்றா லில்லை ……………இல்லை......
வேலைக்கு சமமாய் ஊதியம் பெற்றுத் தீருதல் ஒன்றே
தீர்வாகும் , இதுதான் எமது முடிவாகும்
இடப்பக்கம் செல்லும் என் இனிய தோழனே ! முன்னேறி
”செல்லப்பா” உன்பாதையிலே, வெல்லப்பா உன் கொள்கைதனை
உன் பக்கம் நியாயம் இருக்க ,நாமும் உன்பக்கமிருக்க
ஏனிந்தசலசலப்பு எதர்கிந்த மனச் சலிப்பு
தோல்வி இனி உனக்கில்லை துவண்டிடாதே தோழனே
சிட்டுக்குருவிகள் கூட சிக்காமல் போய்விடலாம்
விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்துவிடமாட்டீர்கள்
ஏட்டில் எழுதியது இல்லாமல் போய்விடாது
காட்டில் லுள்ள மரங்கள் கூட வயதானால்
கழிந்துவிடும் ,நாட்டில்லுள்ள நம் ஊழியர்கள்
கணிசமாக கழிந்திடுவார் , அவர்பணி யில்
ஓய்வுதனைப் பெற்றுவிட்டால்,
இத்தணை நாள் பொறுத்திட்டாய் இன்னும் மொரு
ஆயிரம் நாள் எண்ணிப்பொறு பல
ஆயிரம் பேருக்குமேல் நிரந்தரப் பணி கிடைத்திடுமே !
நிம்மதியும் வந்திடுமே ! வான்மதியும் வாழ்த்திடுமே !
நீ தேடி வந்தது பொன்மான்தான்
நீ நாடி வந்தது பொற்குவிதான்
நீ வளர்தது கூட பொற்கிழிதான்
எனும் காலம் வெகு தூரம் இல்லை
செங்கொடி என்றும் தாழ் ந்ததில்லை
செங்கொடி இயக்கம் என்றும் வீழ்ந்ததில்லை
போராடாமல் வெற்றி இல்லை,
போராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை !!!
நாளை நமதே !! வெற்றி நமதே !!!
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்
ஒப்பந்த தொழிலாளர் திருப்பூர்
நம்பி கை வைப்போம்
-------------------------------------
வல்லரசு தேசத்தில் கூட
வாழ்வாதாரம் இழந்த நிலை
எம் நாட்டு மக்களுக்கோ
விலைவாசி உயர்ந்த நிலை
பரண் மேல் பருப்பு விலை
ஒரு ரூபாவாம் அரிசி விலை
தனியார் மயம் தாராள மயம்
இதுதான் இவர்களது தாரகமந்திரம்
இலவசங்கள் பல உண்டென்பார்
இவன் வசமுள்ள ஓட்டுக்காக
பல குடும்பங்கள் வறுமையில் வாட
சில கும்பங்களே அரசியலில் ஆட
போராட்டம் நடத்தகூட
போதுமான உரிமையில்லை
குண்டர்களும் தொன்டர்களும்
கும்பலாய் தாக்குகின்றனர்
குண்டு களும் தோட்டாகளும்
குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளயும்
கொள்கையாகி விட்டன
புகைப்பதும் குடிப்பதும்
புனிதமாகிவிட்டன
நோய்களும் நொடிகளும்
நோகமல் உள்ளன
மனிதனே மனிதனை கொல்லும்
மனிதாபிமானம் மலிந்து விட்டன
இதயம் கூட இயந்திரத்தில்
இயன்குகின்றனவாம்
இப்படி நாட்டில் பிரச்சினைகளோ
ஏராளம் இதில் எங்கள்
பிரச்சினையும் தாராளம்
கம்பம் நட்டோம்
கம்பி இழுத்தோம்
காளை போல்
கை வண்டி இழுத்தோம்
சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம்
கடும் குழிகள் பல தோண்டிவிட்டோம்
சாக்கடையினுள் புகுந்து பல
ஜாயிண்டு கள் அடித்துவிட்டோம்
கணினியை கூட கச்சிதமாய்
கண்ணியமாய் இயக்குகின்றோம்
சின்ன சின்ன எக்ஜேஞ்சு களுக்கு
நாங்களே இயக்குனர்கள்
பலரின் வாரச்சம்பளம் தான்
எங்களின் மாதசம்பளம்
போராட்டம் பல செய்தோம்
பொருமையாய் இருந்திட்டோம்
சங்கத்தின்மேல் நம்பிக்கை
வைத்தோம் சம்பளத்தில்
உயர்வு பெற்றோம்
முருகையா,செல்லப்பா
மீது நம்பிக்கை வைத்தோம்
அவர்களும் நம்பி _கைவைத்தார்கள்
நல் அங்கிகாரம் பெற்று தந்தார்கள்
அரியர்சும் வாங்கி தந்தார்கள்
தோழ்கொடுக்கும் தோழமையை
தொடர்ந்து வணங்குவோம்
பணி நிரந்தரம் என்பதும்
நிகழ்காலத்திலேயே நிகழ்துவிடும்
நம்பிக்கையோடு இருப்போம்
நிம்மதியோடு இருப்போம்
செங்கொடி என்றும்
தாழ்ந்ததில்லை
செங்கொடி இயக்கம்
என்றும் வீழ்ந்ததில்லை !
நாளை நமதே !வெற்றி நமதே!
ஐ எஸ் சுந்தரக்கண்ணன்
திருப்பூர்
----------------------------
யார்?இவன் ! கவிதை
என்றும் நீ என்னோடுதான்
=========================
சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது
நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது
கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன
பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது
ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல்
மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது
நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?
என்றால் பத்தோடு
பதினொன்றாய் வருமையும்
சொன்னது "என்றும்
சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது
நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது
கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன
பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது
ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல்
மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது
நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?
என்றால் பத்தோடு
பதினொன்றாய் வருமையும்
சொன்னது "என்றும்
நீ என்னோடுதானென்று"
மனிதனின்
மாண்பு
=========================
=========================
மனிதன் இவனொரு
மகத்தா பிறவி
மண்ணில்
இவனொரு புண்ணிபிறவி
கூடிவாழ்வது
தான் இவனது பழமை
குடித்து
வாழ்வது தான் இவனது புதுமை
கொடுத்துக்கொடுத்தே
வாழ்ந்தவன்
கெடுத்திக்
கெடுத்தே வாழ்கின்றான்
புறாவில்
தூதனுப்ப தொடங்கியவன்
புதுபுது
தூதுகள் நிதம்
தினம்
படைக்கின்றான்
குரங்கிலிருந்துதான்
பிறந்தோம்
என்பதை
தன் குணங்கொண்டே
அவ்வப்போது
உணர்த்துகின்றான்
கொலையும்
கொள்ளையுமே
கொள்கையாக்கியவன்
வலையை
விரிப்பதையே
கலையாக்கிக்
கொண்டான்
விலைகொடுத்தே
பட்டமும்
பதவியும்
பெறுகின்றவன்,
துப்பாக்கியும்
தோட்டாவுமே
துணைக்கு
வைத்திட்டான்
அதிகாரம்
கொண்டவன்
சதிகாரனாகவே
உள்ளான்
இலவசங்கள்
பல உண்டென்பான்
இவன்
வசமுள்ள ஓட்டுக்காக
பதவிக்கி
வந்ததுமே
பழைமைதனை
மரப்பான்
பரிதவிக்க
விட்டுடுவான்
பாமரனை…
..
ஓட்டிட்டவனை
ஓட்டாண்டியாக்கிடுவான்
விசுவாசி
நானென்பான்
விலைவாசியை
ஏற்றிடுவான்
மின்வெட்டை
அதிகரித்து
கல்வெட்டில்
காவியம்படைப்பான்
மானத்தின்
உச்சமென
பிறந்தவன்
அவ மானத்தின்
அச்சமென
ஆகிவிட்டான்
கர்மவீரனை
கூட தோற்கடித்தவன்
மாவீரனையும்
மண்டியிடச்செய்தான் .
மனிதமாண்பு
பற்றிப்பேசுகையில்
மகாத்மா
ஒருவரையே
தன்
மனதினுள்: புதைத்தான்,
அவரையும்
வாழவிடாது
கொன்றே
புதைத்தான்,
அவர்
கொள்கையாவது
வாழவிட்டு
மனித மாண்புதனை போற்றுவோம்!
I S சுந்தரக்கண்ணன்
என் தாய்
உயிருக்குள் உயிர் வளர்தாய்
உலகத்தையே பார்க்கவைத்தாய்
ஊனிற்க்கு உதிரம் கொடுத்தாய்
உன்னில் எனைப் பார்த்தாய்
அறிவுக்கு அறிவு கொடுத்தாய்
அன்புக்கு அன்பை கொடுத்தாய்
கண்ணின் கரு விழிதந்தாய்
காலால் நடக்க வைத்தாய்
கைகளால் செயல் படவைத்தாய்
காதின் ஒலியால் கேட்கவத்தாய்
நினைவில் என்றும் நினைக்க வைத்தாய்
நிதமும் பேசும் வார்த்தை தந்தாய்
வெண்ணிலவாய் குளிர்தந்தாய்
வெண்பனியாய் வெப்பம் தணித்தாய்
தென்றல் போல் சுகம் தந்தாய்
தேனீர் போல் சுவை தந்தாய்
திகட்டாத இன்பம் தந்தாய்
இத்தனையும் தந்தாய்
நானுனக்கு என்ன தந்தேன்!
என்னை தந்தவளுக்கு
என்ன தந்தால் ஈடாகும்!அம்மா!
கடற்கரையில்
கட்டிய
மணல்
வீடுகள்
கடல் அலைகளால் அழிவதைக்
கண்டிருக்கிறேன்
பேரலை வந்து வீடுகளியும்
அழித்தபேரளிவை அன்றுதான்
கண்டேன் ! பெளர்ணமியன்று
கடல் கொஞ்சம்கொந்தளிக்கு
மெனச்சொன்னார்கள்
மூர்கத்தனமான கொந்தளிப்பால்
மூர்ச்சையானது எத்தனை
உயிர்கள்யாரையோ தேடித்தேடி
அவர் வராததால்கரைவந்து
திரும்புகிறாய் எனகண்ணியமாய்
நினைத்தேன் ஆனால்நீதேடிய
உயிர்களும் உடல்களும்
உடமைகளும்தான் எத்தனை
எத்தனை !உன் அலைகளை
எம்மக்கள்பார்த்துரசிப்பதால்
தான் அடிக்கடிவந்து போகிறாய்
என வாஞ்ஞையோடு இருந்த
என்னை வஞ்சித்து விட்டாயே
கடல் அலைபோலத்தான்
மனிதவாழ்கையும் இன்பமும்
துன்பமும் வந்துவந்துபோகு
மென பெரியோர்கள் சொல்ல
கேள்விஅதனால் தானோ
என்னவோஅமைதியாய்
வாழ்ந்த எம் மானிடஉயிர்களை
சுனாமி என்ற பினாமியால்
வந்து வந்து போக வைத்தாயே
மக்கள்கூட்டம் அதிகமானால்
அலைகடெலென கூட்டம்
என்போம்அதனால் தான்
அலையால் கூட்டம்கூட்டமாய்
கொன்றுகுவித்தாயோ!
என் சமுதாயத்தில் ஒரு
உயிர்போனாலும் ஓரயிரம்
சடங்குகளும் சம்பிரதாயங்களும்,
சட்டதிட்டங்களும் ஆனால் அன்று
உன் கோரப்பசியால்
உயிரை உணவாக்கி
உடலைகழிவாக்கியனாயே!
உன்னால் உயிர்போன உடல்களை
ஒரேகுழியில் ஒரேசடங்காய்
போட்டுபுதைத்தகாட்சிக் கொடுமையை
என்னவென்றுசொல்வேன்
எப்படித்தான் மரப்பேன்
சாவதர்காகத்தான் பிறந்தோ
மென்றாலும்எதையாவது
சாதிக்கத்துடிக்கும்என் சமூகத்தை
உனக்கேற்ப்பட்டதாகத்தால்
தண்ணீரால் உயிர் குடித்தாயே!
சித்தர்கள் வாழ்ந்திட்ட சிங்கார
பூமியிலே புத்தனும் வாழ்ந்திட்ட
புண்ணிய பூமியிலே எத்தர்கள்
ஏகம்பேர் இருக்க பாவம்
ஏழைகளை பார்த்து ஏவல்தனை
புரிந்தாயோ! உன் கோரப்பசி
எனும் கொடும் பார்வை என் மீது
படாததால் உயிர்தப்பினேன்!
என் ஒருவன் உயிர் தந்திருந்தால்
நீ பலி எடுத்த உயிர்களை
விட்டிருப்பேன்எனச் சொல்லி
இருந்தால் ஓடோடிவந்து
உன் காலடியில் மாண்டிருப்பேன்!
குடந்தையில் கருகிய குஞ்சுகளால்
ரணம் இன்னும் ஆரவில்லை
அதர்குள்வெந்த புண்ணில் வேல்
பாச்சினாயே!தாண்டவம்
கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் அன்று நீ ஆடிய
"கோரத்தாண்டவம்"இதுவரை
பார்த்ததில்லை இனியும்
பார்க்க விருப்பமில்லை
ஆர்ப்பரிக்கும் அலை களால்
ஆள்பரிக்கும் அவலமினி
வேண்டாம் இனியும் தலை
தூக்கவேண்டாமென தயவாய்
வேண்டுகிறேன்!
கடல் அலைகளால் அழிவதைக்
கண்டிருக்கிறேன்
பேரலை வந்து வீடுகளியும்
அழித்தபேரளிவை அன்றுதான்
கண்டேன் ! பெளர்ணமியன்று
கடல் கொஞ்சம்கொந்தளிக்கு
மெனச்சொன்னார்கள்
மூர்கத்தனமான கொந்தளிப்பால்
மூர்ச்சையானது எத்தனை
உயிர்கள்யாரையோ தேடித்தேடி
அவர் வராததால்கரைவந்து
திரும்புகிறாய் எனகண்ணியமாய்
நினைத்தேன் ஆனால்நீதேடிய
உயிர்களும் உடல்களும்
உடமைகளும்தான் எத்தனை
எத்தனை !உன் அலைகளை
எம்மக்கள்பார்த்துரசிப்பதால்
தான் அடிக்கடிவந்து போகிறாய்
என வாஞ்ஞையோடு இருந்த
என்னை வஞ்சித்து விட்டாயே
கடல் அலைபோலத்தான்
மனிதவாழ்கையும் இன்பமும்
துன்பமும் வந்துவந்துபோகு
மென பெரியோர்கள் சொல்ல
கேள்விஅதனால் தானோ
என்னவோஅமைதியாய்
வாழ்ந்த எம் மானிடஉயிர்களை
சுனாமி என்ற பினாமியால்
வந்து வந்து போக வைத்தாயே
மக்கள்கூட்டம் அதிகமானால்
அலைகடெலென கூட்டம்
என்போம்அதனால் தான்
அலையால் கூட்டம்கூட்டமாய்
கொன்றுகுவித்தாயோ!
என் சமுதாயத்தில் ஒரு
உயிர்போனாலும் ஓரயிரம்
சடங்குகளும் சம்பிரதாயங்களும்,
சட்டதிட்டங்களும் ஆனால் அன்று
உன் கோரப்பசியால்
உயிரை உணவாக்கி
உடலைகழிவாக்கியனாயே!
உன்னால் உயிர்போன உடல்களை
ஒரேகுழியில் ஒரேசடங்காய்
போட்டுபுதைத்தகாட்சிக் கொடுமையை
என்னவென்றுசொல்வேன்
எப்படித்தான் மரப்பேன்
சாவதர்காகத்தான் பிறந்தோ
மென்றாலும்எதையாவது
சாதிக்கத்துடிக்கும்என் சமூகத்தை
உனக்கேற்ப்பட்டதாகத்தால்
தண்ணீரால் உயிர் குடித்தாயே!
சித்தர்கள் வாழ்ந்திட்ட சிங்கார
பூமியிலே புத்தனும் வாழ்ந்திட்ட
புண்ணிய பூமியிலே எத்தர்கள்
ஏகம்பேர் இருக்க பாவம்
ஏழைகளை பார்த்து ஏவல்தனை
புரிந்தாயோ! உன் கோரப்பசி
எனும் கொடும் பார்வை என் மீது
படாததால் உயிர்தப்பினேன்!
என் ஒருவன் உயிர் தந்திருந்தால்
நீ பலி எடுத்த உயிர்களை
விட்டிருப்பேன்எனச் சொல்லி
இருந்தால் ஓடோடிவந்து
உன் காலடியில் மாண்டிருப்பேன்!
குடந்தையில் கருகிய குஞ்சுகளால்
ரணம் இன்னும் ஆரவில்லை
அதர்குள்வெந்த புண்ணில் வேல்
பாச்சினாயே!தாண்டவம்
கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் அன்று நீ ஆடிய
"கோரத்தாண்டவம்"இதுவரை
பார்த்ததில்லை இனியும்
பார்க்க விருப்பமில்லை
ஆர்ப்பரிக்கும் அலை களால்
ஆள்பரிக்கும் அவலமினி
வேண்டாம் இனியும் தலை
தூக்கவேண்டாமென தயவாய்
வேண்டுகிறேன்!