---------------------------------------------
இரு மாநிலச் ச்ங்கங்களின் அறைகூவலின்படி ஒப்பந்த ஊழியரின்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை CGM அலுவலகம் முன்பு 23/06/2008 அன்று மாபெரும் தர்ணா நடைபெற்றது. தோழர் A .K.பத்மநாபன்CITU, துவக்கிவைத்து எழுச்சியுரையாற்றினார். 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.CGM அலுவலகமே திணறியது சங்கத்தலைவர் CGM-ஐ சந்தித்து தினம் ரூ.140/= சம்பளம் என்ற கோரிக்கையை வலியுறித்தினர்.தினம் ரூ.140/=சம்பளம் என்ற கோரிக்கையை சிபாரிசு செய்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதாக CGM உறுதியளித்தார் கோவை மாவட்டத்திலிருந்து மட்டும் 200க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.ஒப்பந்த ஊழியர் நெஞ்சில் நம்பிக்கையை உறுதிபடுத்திய போராட்டம் இது!!!
நம்பி கை வைப்போம்
வாழ்வாதாரம் இழந்த நிலை
எம் நாட்டு மக்களுக்கோ
விலைவாசி உயர்ந்த நிலை
பரண் மேல் பருப்பு விலை
ஒரு ரூபாவாம் அரிசி விலை
தனியார் மயம் தாராள மயம்
இதுதான் இவர்களது தாரகமந்திரம்
இலவசங்கள் பல உண்டென்பார்
இவன் வசமுள்ள ஓட்டுக்காக
பல குடும்பங்கள் வறுமையில் வாட
சில கும்பங்களே அரசியலில் ஆட
போராட்டம் நடத்தகூட
போதுமான உரிமையில்லை
குண்டர்களும் தொன்டர்களும்
கும்பலாய் தாக்குகின்றனர்
குண்டு களும் தோட்டாகளும்
குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளயும்
கொள்கையாகி விட்டன
நோய்களும் நொடிகளும்
நோகமல் உள்ளன
மனிதனே மனிதனை கொல்லும்
மனிதாபிமானம் மலிந்து விட்டன
இதயம் கூட இயந்திரத்தில்
இயன்குகின்றனவாம்
இப்படி நாட்டில் பிரச்சினைகளோ
ஏராளம் இதில் எங்கள்
பிரச்சினையும் தாராளம்
கம்பம் நட்டோம்
கம்பி இழுத்தோம்
காளை போல்
கை வண்டி இழுத்தோம்
சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம்
கடும் குழிகள் பல தோண்டிவிட்டோம்
சாக்கடையினுள் புகுந்து பல
ஜாயிண்டு கள் அடித்துவிட்டோம்
கணினியை கூட கச்சிதமாய்
கண்ணியமாய் இயக்குகின்றோம்
சின்ன சின்ன எக்ஜேஞ்சு களுக்கு
நாங்களே இயக்குனர்கள்
பலரின் வாரச்சம்பளம் தான்
எங்களின் மாதசம்பளம்
போராட்டம் பல செய்தோம்
பொருமையாய் இருந்திட்டோம்
சங்கத்தின்மேல் நம்பிக்கை
வைத்தோம் சம்பளத்தில்
உயர்வு பெற்றோம்
முருகையா மீது நம்பிக்கை
வைத்தோம் ,அவரும்
நம்பி _கைவைத்தார் நல்
அங்கிகாரம் பெற்று தந்தார்
அரியர்சும் வாங்கி தந்தார்
தோழ்கொடுக்கும் தோழமையை
தொட்டு வணங்குவோம்
பணி நிரந்தரம் என்பதும்
நிகழ்காலத்திலேயே நிகழ்துவிடும்
நம்பிக்கையோடு இருப்போம்
நிம்மதியோடு இருப்போம்
செங்கொடி என்றும்
தாழ்ந்ததில்லை
செங்கொடி இயக்கம்
என்றும் வீழ்ந்ததில்லை !
நாளை நமதே !வெற்றி நமதே!
ஐ எஸ் சுந்தரக்கண்ணன்
கோவை மாவட்ட துணை தலைவர்
திருப்பூர்