*உறைநிலையில் BSNLன் 4G.*
சுதந்திர தினத்தன்று, BSNLன் 4G சேவையை, பாரத பிரதமர் துவக்கி வைப்பார் என்றும், அதன் பின், அகில இந்திய அளவிலான 4G சேவையினை, 2022, டிசம்பர் மாதத்தில் BSNL துவங்கும் என்றும், படோடாபமாக அறிவிக்கபட்டது. ஆனால் தற்போது BSNL, 4G சேவையினை எப்போது துவங்கும் என்பது, விடை தெரியாத வினாவாக மாறிவிட்டது. அதில் பல நிச்சயமற்ற நிலைமைகள் உருவாகி உள்ளன.
BSNLக்கான 4G கருவிகளை, TCS நிறுவனம் வழங்கும் என்று நம்மிடம் கூறப்பட்டது. இதற்காக சண்டிகார், அம்பாலா உள்ளிட்ட இடங்களில், TCS நிறுவனம் தனது சோதனைகளை துவக்கியது. இந்த நிறுவனம் 31.12.2021க்குள், தனது PROOF OF CONCEPT (PoC)ஐ முடித்திருக்க வேண்டும். PROOF OF CONCEPT (PoC)ஐ முடிப்பது என்றால், BSNLக்கு 4G கருவிகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப திறன், தன்னிடம் உள்ளது என, TCS நிறுவனம் நிரூபிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில், TCS நிறுவனத்தால் தனது PROOF OF CONCEPT (PoC)ஐ முடிக்க இயலவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
அதன் விளைவாக, TCSன் PoCக்கு, தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாக நம்மிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், 31.03.2022 அன்று, 6,000 4G கருவிகளை வாங்குவதற்கான உத்தரவை BSNL நிறுவனம், TCSக்கு வழங்கியது. ஆனால் இதுவரை அந்த உத்தரவை, TCS நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறியும் போது அதிர்ச்சியாக உள்ளது. BSNL குறிப்பிட்ட விலைக்கு 6,000 4G கருவிகளை வழங்க TCS விரும்பவில்லை என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், விலை தொடர்பாக BSNL மற்றும் TCSக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் பொருட்களின் கடும் விலையேற்றத்தையும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியையும் காரணம் காட்டி, கருவிகளின் விலையை அதிகரிக்க TCS நிறுவனம் முயற்சிக்கின்றது.
தற்போது ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது. பாரத பிரதமர், BSNLன் 4G சேவையை துவக்குவதற்காக குறிப்பிடப்பட்ட சுதந்திர தினத்திற்கு இன்னமும் ஒன்னரை மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள், 5G சேவையினை துவங்க உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், BSNL நிறுவனம் இன்னமும் 4G சேவையினை துவங்கவே சிரமப்பட்டுக் கொண்டிருப்பது, BSNLக்கும் அதன் ஊழியர்களுக்கும் வேதனை தரும் விஷயமாகும். 4G சேவை துவங்குவதற்கு காலதாமதம் ஆவதன் காரணமாக, BSNLன் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. விரைவில், விருப்ப ஓய்வு திட்டத்தித்கு முந்தைய நிலைக்கு கூட செல்லக்கூடும்.
அதேசமயத்தில், தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், வெகு நாட்களுக்கு முன்னரே, BSNL, தனது 4G சேவையினை துவங்கி இருக்க முடியும் என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி. BSNLன் வருவாயில், இந்த இரண்டு மண்டலங்களும் கணிசமான பங்கினை வகிக்கின்றன. இந்த இரண்டு மண்டலங்களில் உள்ள 19,000 டவர்களை, ஒரு சில வாரங்களில், நோக்கியா நிறுவனம் மேம்படுத்தி இருக்கும். அதற்காக BSNL நிறுவனம், 500 கோடி ரூபாய்களை செலவளித்திருந்தால் மட்டுமே போதும்.
இதனை ஏன் செய்யவில்லை? அரசாங்கமும், BSNL நிர்வாகமும், ஏன் TCSன் பின் ஓட வேண்டும்? BSNL நிறுவனம், 4G சேவையினை துவங்குவதற்கு, தொடர்ச்சியாக ஏன் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன? இந்த தேசம், இவற்றிற்கான பதிலை எதிர்பார்க்கின்றது.
*தோழர் P.அபிமன்யு* *பொதுச்செயலாளர்*
தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
தமிழ் மாநிலம்
கோரிக்கை பதாகை ஏந்தி போராட்டம்
சென்னை முதன்மை பொது மேலாளர் அலுவலகம்
30.06.2022 வியாழக்கிழமை காலை 10 மணி
BSNL நிர்வாகமே
• 21 மாத காலமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்கிடு.
• ஒப்பந்த தொழிலாளர்களை பட்டினி போட்டு சாகடிக்காதே.
• ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாதே.
• அவுட்சோர்சிங் திட்டத்தை மறு பரிசீலனை செய்திடு.
தொழிலாளர் நலச் சட்டங்களான EPF, ESI, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை அவுட்சோர்சிங் திட்டத்தில் உறுதி செய்திடு.
• மறைந்த ஒப்பந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு சட்டப்பூர்வமான நிவாரணம் வழங்கிடு.
• நீதி மன்ற தீர்ப்பின்படி EPF ESI - யை ஒப்பந்த தொழிலாளர் கணக்கில் சேர்த்திடு.
தோழர்களே..
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், அவுட்சோர்ஸிங் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
EPF, குறைந்த பட்ச ஊதியம் போன்ற தொழிலாளர் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்..
மேற்கண்ட ஷரத்துக்களை உள்ளடக்கி புதிய டெண்டர் வெளியிடப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்காக 30.06.2022 அன்று நாடு முழுவதும் பதாகை அணிந்து போராட்டம் நடத்திட BSNL CCWF அறைகூவல் விட்டுள்ளது. BSNLEU, AIBDPA உள்ளடக்கிய தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழு முழு ஆதரவு அளித்துள்ளது. இப்போராட்டத்தில் மாவட்டங்களில் உள்ள முக்கியமான பிரச்னைகளை நாம் இனைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். அதன் அடிப்படியில் சில மாவட்டங்கள் தங்கள் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதி விட்டு நமக்கு நகல் அனுப்பி உள்ளன. அந்தப் பிரச்னைகளையும் உள்ளடக்கி இன்று
(27.06.2022) தமிழ் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிட தமிழ் மாநில BSNLEU சங்கம் முடிவு செய்துள்ளது. விடுபட்ட மாவட்டச் சங்கங்கள் இன்று மாலைக்குள் கடிதம் எழுதிட வேண்டும். இன்று மாலை தொகுத்து நிர்வாகத்திற்கு அனுப்பபடும் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாநில சங்கம்
*ஓநாய்களுக்கு உள்ள நியாயம் தர்க்கம் கூட இவர்களுக்கு கிடையாது*
கேள்வி: தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் "சமதள ஆடு களம்" வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பது ஏன்?
*க.சுவாமிநாதன்*
ஜூன் 20, 2022 அன்றைய இந்து பிசினஸ் லைன் செய்தி தரும் தகவல் இது.
*ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடாபோன்* ஆகிய தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒரு கடிதத்தை அரசாங்கம், டெலிகாம் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுக்கு எழுதியுள்ளன. இவர்களின் சார்பாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் ஆப் இந்தியா அமைப்பும் அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்துள்ளது.
*"சமதள ஆடுகளம்"* (Level playing field) வேண்டும் என்பதுதான் அது. காரணம் அமைச்சரவை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் சொந்த உபயோகத்திற்கு மட்டுமான 5 ஜி வலை சேவையை *(Captive Non-Public Private Network - CNPN)* வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்திருப்பதுதான். இதனால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலமாக அல்லாது *டி. சி.எஸ், சிஸ்கோ* போன்ற நிறுவனங்கள் தனி வலைச் சேவையை வைத்துக் கொள்ளலாம் என்பதே.
இதனால்தான் ஜியோ, ஏர்டெல், வோடா போன் நிறுவனங்களுக்கு கோபம்.
என்ன கேட்கிறார்கள்?
* _ஏன் எங்கள் மூலமே அவர்கள் அந்த சேவையை பெறலாமே?_
* _ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் போதுமான அளவில் இல்லாததால் டேட்டா வேகம் பாதிக்கப்படும் போது இப்படி தனியார்கள் வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தால் பொது சேவை இன்னும் பாதிக்கப்படாதா?_
* _எங்களுக்கெல்லாம் வருவாயில் 8 சதவீதம் லைசன்ஸ் கட்டணம் என்று வாங்குகிறீர்களே! இப்படி நீங்கள் அனுமதிக்கும் தனி வலை சேவை நிறுவனங்களிடமும் வாங்குவீர்களா?_
* _எங்களுக்கு போடப்படுகிற வரிகள் அவர்கள் மீதும் போடப்படுமா?_
* _அவர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டால் எப்படி நாங்கள் முதலீடுகளை செய்வது?_
ஆகவே சமதள ஆடுகளம் வேண்டும் என்று அவர்களின் கடிதம் கூறுகிறது.
பார்க்கும் போது நியாயம் ஆக தோன்றும்.
*ஓநாய்கள் பற்றி பொதுவாக பேசப்படும் விசயம்தான் நினைவுக்கு வருகிறது. அவை போடும் குட்டிகளை அவையே சாப்பிடும் என்பதே அது. பிரசவத்தின் போது இறந்து போன குட்டிகளை, இறந்து போய் விடும் நிலையில் உள்ள குட்டிகளை அவை தின்று விடும். தாயே குழந்தைகளை தின்பதா? என்ற மனித நீதி ஓநாய்களுக்கு பொருந்தாது. காரணம் மரணித்த குட்டிகளை அப்படியே விட்டு விட்டால் அதன் உடல்களில் எழும் நாற்றத்தால் வேறு மிருகங்கள் வந்து மற்ற குட்டிகளையும் தின்று விடும் என்ற காரணமே. நாம் இங்கு ஓநாய்களை பற்றி பேசவில்லை. ஓநாய்களின் நியாயங்கள், தர்க்கங்களையும் கடந்த முதலாளித்துவ அணுகுமுறையைப் பற்றியே பேசப் போகிறோம்.*
இப்போது சமதள ஆடுகள நியாயத்தைப் பேசும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், *பி.எஸ் என்.எல்* நிறுவனம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பதை நினைத்தாவது பார்ப்பார்களா?
துவக்கத்தில் பி.எஸ் என்.எல் லுக்கு செல் சேவை அனுமதி மறுக்கப்பட்டது. டவர்கள் அமைக்க அனுமதி கேட்ட போது இழுத்தடிக்கப்பட்டது. 4 ஜி சேவைக்கான அனுமதி, அதற்கான உபகரணங்களை வெளி நாடுகளில் வாங்குவதில் எல்லாம் தனியார்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத போது பி.எஸ்.என்.எல் க்கு மட்டும் மறுக்கப்பட்டது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் 5 ஜி யை நோக்கி முன்னேறி விட்டார்கள். பி.எஸ் என்.எல் பின் தங்கி நிற்கிறது.
ஆகவே தனியார்கள் பேசுகிற சமதள ஆடுகளம் எல்லாம் என் லாபத்திற்கு பாதிப்பு வரக் கூடாது என்பது தவிர வேறு ஒன்றுமில்லை. எனக்கு லாபம் வருமென்றால் சமதளமாவது... புடலங்காயாவது!
இவர்கள் பேசுகிற சுதந்திர சந்தை என்பது சந்தைப் பங்கை தங்களுக்குள் பங்கு போடுகிற சுதந்திரம்தான். அதில் ஊடல் வரும். ஆனால் அரசு நிறுவனங்களை சிதைப்பது என்றால் இவர்களுக்குள் வந்து விடும் கூடல்.
*"சேம் சர்வீஸ்... சேம் ரூல்"* (Same service... Same Rule) என்ற இவர்களின் முழக்கம் பி.எஸ்.என்.எல் லுக்கு பொருந்தாதா! சேம் பிளட் (Same blood) தானே!
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுத வேண்டும். அதனுடைய ஒரு நகலை மாநில சங்கத்திற்கு அனுப்ப ேவண்டும். மாநில நிர்வாகத்திற்கு மாநில சங்கம் மூலம் கடிதம் எழுதப்படும். 30.06.2022 அன்று பேச்சு வார்த்தை ஏதும் நடந்தால் அதற்கு இக் கடிதங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
*ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 17.06.2022 ஆர்ப்பாட்டம் நடத்திட BSNL CCWF அறைகூவல்-முழுமையாக பங்கேற்க BSNL ஊழியர் சங்கம் அறைகூவல்.*
ஒப்பந்த ஊழியர்களுக்கு நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 17.06.2022 அன்று மாவட்ட மட்டங்களில், ஆர்ப்பாட்டம் நடத்தி மனு வழங்க வேண்டும் என BSNL CCWF (TNTCWU) அறைகூவல் விடுத்துள்ளது. BSNL CCWFன் இயக்கங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது என, 04.06.2022 அன்று நடைபெற்ற BSNLEU, AIBDPA மற்றும் BSNL CCWF சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டது.
17.06.2022 அன்று நடைபெற உள்ள ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தில், மாநில மாவட்ட சங்கங்கள், முழுமையாக பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம் கேட்டுக்கொள்கிறது.
*தோழர் P.அபிமன்யு* *பொதுச்செயலாளர்*
*BSNL CCWF demonstration tomorrow the 17.06.2022 – circle and district unions are requested to fully participate in the programme.*
The BSNL Casual Contract Workers Federation (BSNL CCWF) is organising demonstrations at the district level and also organising submission of memorandum. The Co-ordination Committee (CoC) of BSNLEU, AIBDPA and BSNL CCWF, in it’s meeting held on 04.06.2022 has decided to extend full co-operation to the programme of BSNL CCWF. The programme is being organised to demand immediate payment of the long pending wage arrears of the contract workers, opposing retrenchment of the contract workers and other issues. The CHQ of BSNLEU calls upon the circle and district union to fully participate in the demonstrations tomorrow and to make the programme a success.
*-P.Abhimanyu,GS.*
தோழர்களே திருச்சி கூட்டத்தில் கேட்டுக் கொண்டபடி அனைத்து தோழர்களும் முதல் தவணை தொகை ரூபாய் 5 000 த்தை தங்களது மாவட்ட செயலர்களிடம் அளிக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன். தொகையுடன் நமது வழக்கறிஞரை சந்திக்க இருக்கின்றோம். தோழர் நித்தியானந்தம் கவனத்திற்கு : மாவட்ட செய்லர்களிடமும் சம்பந்தபட்ட தோழர்களிடமும் பேசி தொகையை உடனே அளிப்பதற்கு ஏற்பாடு செய்யவும். ( தொகை கிடைத்த பின்பு சென்னை சென்று வழக்கறிஞரை சந்திப்போம் ) பழனிச்சாமி
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
தமிழ் மாநிலம்
தோழர்களே
நமது சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக 37 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர உத்தரவை நீதி மன்றம் 22.03.2017 அன்று வழங்கியது. ஆனாலும் உத்தரவை அமுல்படுத்தாமல் BSNL நிர்வாகம் மேல் முறையீடு செய்துள்ளது. மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிரந்தர வழக்கில் உள்ள 37 தோழர்களின் கூட்டம்
04.06. 2022 அன்று திருச்சியில் மாநில தலைவர் தோழர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 27 தோழர்கள் கலந்து கொண்டனர். இறந்த போன சில தோழர்களின் வாரிசுதாரர்களும் கலந்து கொண்டனர்.
வழக்கை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் உள்ள தோழர்கள் R.சிரில் ராஜ், (சென்னை)
A.நித்தியானந்தம் (கும்பகோணம்,) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இன்றைய மத்திய அர்சின் தொழிலாளர் விரோத கொள்கை, BSNL நிர்வாகத்தின் ஒப்பந்த தொழிலாளர் விரோத போக்கு, மாதாமாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்ற நீதி மன்றத் தீர்ப்புக்களை அமுல்படுத்தாமை போன்ற முக்கியமான அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களுக்குப் பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
வழக்கு குழு தொடர்ந்து வழக்கை நடத்தும். நமது வழக்கறைஞரை நேரில் சந்தித்து விரைவில் தீர்ப்பை பெற முயற்சி செய்யப்படும்.
வழக்கில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய தற்போதைய முகவரி, தொட்ர்பு எண், மறைந்த தோழர்களின் வாரிசுதாரர்களின் பெயர் மற்றும் முகவரி, தொட்ர்பு எண், இறந்த சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உடனே மாவட்ட சங்கத்திடம் அளிக்க வேண்டும்.
நீதி மன்ற தீர்ப்பின் நகல், முறையீட்டு WP எண் ஆகியவற்றையும் ஒவ்வொரு தோழரும் வைத்திருக்க வேண்டும்.
வழக்கு செலவாக ஒவ்வொரு தோழரும் ரூபாய் 10000 செலுத்த வேண்டும். முதல் தவனை ரூபாய் 5000 இம்மாதம்
15-ஆம் தேதிக்குள்ளும் அடுத்த தவனை ரூபாய்
5000 அடுத்த மாதம் 15 -ஆம் தேதிக்குள்ளும் மாவட்டசங்கத்திடம் செலுத்த வேண்டும். மாவட்ட சங்கம் அதை மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இது சம்பந்தமாக அந்தந்த மாவட்டசெய்லர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்
தோழமையுடன்
மாநில செயலாளர்
ஏற்கனவே கீழ்க்கண்ட விவரங்களை உடனே அளிக்கும்படி மறுபடியும் கேட்டுக்கொள்கின்றேன்.
A. உங்கள் மாவட்டத்தில் என்னென்ன பணியில் WORKERS CONTRACT TENDER உள்ளது ?
B. எத்தனை ஊழியர்கள் பணி புரிகின்றனர் ?
C. என்னென்ன பணிகளில் OUTSOURCING CONTRACT விடப்பட்டுள்ளது ?
1. LINE MAINTENANCE AND BRODBAND MAINTENANCE
2. TOWER MAINTENANCE
3. OFC MAINTENANCE
4. SWEEPING AND CLEANING WORK
5. DRIVER
6. INFRASTRUCTURE MAINTENANCE
D. CUSTOMER SERVICE CENTRES MAINTENANCE
E. ஒவ்வொன்றிலும் எத்தனை ஊழியர்கள் பணி புரிகின்றனர் ?
F. மாவட்டத்தில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் ?
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
தமிழ் மாநிலம்
தோழர்களே..
சென்னை உயர் நீதி மன்றத்தில் உள்ள நிரந்தர வழக்கின் தற்போதைய நிலை சம்பந்தமான விளக்க கூட்டம் 04.06.2022 சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு திருச்சி BSNLEU சங்க அலுவகத்தில் நடைபெறும். வழக்கில் உள்ள தோழர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட செயலர்கள் சம்பந்தபட்ட தோழர்களுக்கு உரிய தகவல் கொடுத்து அவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறிது.
தோழமையுடன்,
C.வினோத்குமார்
மாநில செயலாளர்
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
தமிழ் மாநிலம்
தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன்
பணி ஓய்வு பாராட்டு விழா
28.05.2022 சனிக்கிழமை
S A அரங்கம், கோவை.
BSNLEU சங்கத்தின் மாநிலத் தலைவரும் நமது சங்கத்தின் உதவித் தலைவருமான தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் 30.04.2022 அன்று பணி ஓய்வு பெற்றார்.
TNTCWU சங்கம் தோன்றிய நாள் முதல் இன்று வரை சங்கத்தை செலுமைப்படுத்துவதில் மிக முக்கிய்மான பாத்திரம் வகித்தவர். ஒப்பந்த தொழிலாளர்களின் தனி நபர் பிரச்னைகளிலிருந்து பொது பிரச்னைகள் வரை அனைத்திலும் தீர்விற்காக தலையீடு செய்தவர்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கான அனைத்து போராட்டங்கலும் தளபதியாக செயல்பட்ட தோழர்.
நிரந்தர ஊழியர் ஒப்பந்த தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தில் முன்னணி பாத்திரம் வகித்தவர்.
அவருடைய பணி ஓய்வு பாராட்டு நிகழ்வில் ஒப்பந்த தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்
தோழமையுடன்
மாநிலச் சங்கம்
28.05.2022 சனிக்கிழமை காலை BSNLEU மாநிலச் சங்கத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கம் நிகழ்விலும் ஒப்பந்த ஊழியர்கள் சக்தியான முறையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்